குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஏப்ரல் மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் மே மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் வழங்க திட்டம்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

குறைந்த வருமானம் பெறும் சுமார் 28 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 20 கிலோகிராம் அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, ஏப்ரல் மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் மே மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, 28 லட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கியதை போல, இம்முறையும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு இரண்டு தடவைகள் அரிசி வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படுவதுடன், மே மாதம் முதல் வாரத்தில் 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT