சில்க் ஸ்மிதாவுக்கு குழந்தைகள்?  உண்மையை உடைத்த டிஸ்கோ சாந்தி!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபலமானவர் டிஸ்கோ சாந்தி . இவருக்கு உதயகீதம் என்ற திரைப்படத்தின் மூலமாக வாய்ப்பு கிடைத்தது.

ஜுன் 21, 2023 - 17:21
ஜுன் 21, 2023 - 17:22
சில்க் ஸ்மிதாவுக்கு குழந்தைகள்?  உண்மையை உடைத்த டிஸ்கோ சாந்தி!

சில்க் ஸ்மிதாவுக்கு குழந்தைகள்

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபலமானவர் டிஸ்கோ சாந்தி . இவருக்கு உதயகீதம் என்ற திரைப்படத்தின் மூலமாக வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து ஐட்டம் பாடல்களில் நடனமாட ஆரம்பித்தார். அதன் பிறகு இவரை அனைவரும் டிஸ்கோ சாந்தி என்று செல்லமாக அழைத்தார்கள். 

அந்த காலத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கு பேரும் புகழும் இருந்தது. டிஸ்கோ சாந்தி, அனுராதா ,சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி, ஹேமாலினி என பல நடிகைகளை நாம் கூறிக் கொண்டே போகலாம்.

டிஸ்கோ சாந்தி

நடிகை டிஸ்கோ சாந்தி சமீபத்தில் குட்டி பத்மினி அவர்கள் எடுத்த பேட்டியில் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர் சில்க் ஸ்மிதா குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார். அவர் மிகவும் குழந்தைத்தனமான ஒரு நபர் என்று தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தற்போது வரை புரியாத புதிராக இருக்கின்றது.

என்னிடம் மிகவும் அன்பாக பேசக்கூடிய ஒரு நபர். அவர் இல்லாதது சினிமாவிற்கு மிகப்பெரிய நட்டம் என்று தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் அவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர்களது முதல் மனைவியின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவ்வபோது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவாராம். அவர்கள் அனைவருமே தங்களிடம் நன்றாக பேசுவார் என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சில்க் ஸ்மிதாவுக்கு குழந்தைகள் இருந்தார்களா? என்று ஆச்சரியமுடன் கேட்டு வருகிறார்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!