டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இன்றைய தினம் (22) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தினம் (22) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.15 ரூபாயிலிருந்து 316.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 330.39 ரூபாயிலிருந்து 330.13 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.67 ரூபாயிலிருந்து 317.20 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 329 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 329 ரூபாயிலிருந்து 328 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 51 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபாய் 55 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபாய் 19 சதம் - விற்பனை பெறுமதி 406 ரூபாய் 23 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபாய் 46 சதம் - விற்பனை பெறுமதி 352 ரூபாய் 84 சதம்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபாய் 89 சதம் - விற்பனைப் பெறுமதி 246 ரூபாய் 11 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபாய் 74 சதம் - விற்பனைப் பெறுமதி 213 ரூபாய் 50 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபாய்  73 சதம் - விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 61 சதம். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT