இலங்கையின் தேயிலைத் துறை உற்பத்தியை அதிகரிக்க முன்வந்துள்ள சீனா

இலங்கையில் தேயிலை ஒரு முக்கிய பணப் பயிராக உள்ள நிலையில், இந்த கூட்டு முயற்சி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் தேயிலைத் துறை உற்பத்தியை அதிகரிக்க முன்வந்துள்ள சீனா
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் தேயிலை துறை உற்பத்தியை அதிகரிப்பதற்கு, சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத பூச்சி கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை, இலங்கை போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்துவதாக, சீனாவின் குய்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாங் லிபோ தெரிவித்துள்ளார். 
 
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த முறைகளை முன்னதாகவு  ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இதனூடாக தேயிலையின் உற்பத்தி மற்றும் தரம் என்பனவும் மேம்படும் என்று ஜாங் லிபோ கூறியுள்ளார்.
 
இலங்கையில் தேயிலை ஒரு முக்கிய பணப் பயிராக உள்ள நிலையில், இந்த கூட்டு முயற்சி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
உலகில் அதிக தேயிலையை உற்பத்தி செய்யும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாகவும்,  சீனாவின் குய்சோவை போன்றே இலங்கையிலும் மலைப்பகுதிகளில் தேயிலை உற்பத்தி செய்யப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். 
 
இந்த நிலையில், தங்களின் தொழில்நுட்ப உதவிகள் தேயிலைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுவதாகவும், தேயிலைத் தோட்டங்களில் விளைச்சலும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், சீனாவின் குய்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாங் லிபோ கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT