ஈரானில் எரிவாயு சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து - 12 பேர் உயிரிழப்பு
ஈரானிலுள்ள எரிவாயு சுத்திகரிப்பு நிலையமொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈராக் எல்லைக்கு அருகிலுள்ள அப்தானான் (Abdanan) மற்றும் தெஹ்லோரான் (Dehloran) ஆகிய பகுதிகளுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஈரானின் வீதிப் பாதுகாப்புத் தொடர்பில் காணப்படும் பலவீனங்கள் குறித்து அந்நாட்டின் உத்தியோகபூர்வ சட்ட வைத்திய அமைப்பு கடந்த ஜூலை மாதம் தகவல்களை வெளியிட்டிருந்தது. அதற்கமைய, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 12 மாத காலப்பகுதியில் ஈரானில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சுமார் இருபதாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.