2026 வரவுசெலவுத் திட்ட அமுலாக்கம்: அமைச்சுகளின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து விசேட மீளாய்வு

2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் அமுலாக்க முன்னேற்றம், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் துரித நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் தலைமையில் நடைபெற்ற விசேட மீளாய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

2026 வரவுசெலவுத் திட்ட அமுலாக்கம்: அமைச்சுகளின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து விசேட மீளாய்வு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்ட மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சு மட்டத்தில் அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் செயலாக்கம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

திட்டங்களை முன்னெடுத்து செல்லும் போது எதிர்கொள்ளப்படும் நடைமுறைச் சிக்கல்கள், நிர்வாகத் தடைகள் மற்றும் அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மத்தியில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகளும் பரிசீலிக்கப்பட்டன.

பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதாரம், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுகளின் திட்டங்கள் குறித்து தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டது.

மேலும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ஆகிய துறைகளின் திட்ட முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனுடன் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, சுற்றாடல், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் போன்ற அமைச்சுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த மீளாய்வின் மூலம், 2026 வரவுசெலவுத் திட்டத்தின் இலக்குகள் திறம்பட நிறைவேற்றப்படுவதையும், பொதுமக்களுக்கு திட்டங்களின் பயன்கள் விரைவாகக் கிடைப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT