அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகளை நாளை (29) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள சுமார் 7 இலட்சம் முதிய பயனாளிகளுக்காக மொத்தமாக 3,493,915,000 ரூபாய் நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதியோருக்காக 3,125,600,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 73,663 முதிய பயனாளிகளுக்காக 368,315,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து பயனாளிகளும் தமக்கான கொடுப்பனவை நாளை முதல் தங்களது அஸ்வெசும பயனாளர் வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT