பூட்டிய வீட்டில் இருந்து பிரபல நடிகை சடலமாக மீட்பு

நடிகை கஜோல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி டிரையல் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நூர் மலபிகா தாஸ் மிகவும் பிரபலமானார். 

பூட்டிய வீட்டில் இருந்து பிரபல நடிகை சடலமாக மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரபல இந்தி நடிகை நூர் மலபிகா தாஸ் (37). இவர் இந்தியில் சிஸ்கியன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், வால்க்மென், டெக்கி சாந்தி, ஜகன்யா உபயா உள்பட பல்வேறு வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

நடிகை கஜோல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி டிரையல் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நூர் மலபிகா தாஸ் மிகவும் பிரபலமானார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

நூர் மலபிகா தாஸ் சினிமா துறைக்கு வருவதற்குமுன் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த நூர் மலபிகா தாஸ் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், மலபிகா தாஸ் தங்கி இருந்த வீட்டில் கடந்த சில நாட்களாக பூட்டி இருந்த நிலையில் வீட்டில் இருந்து இன்று துர்நாற்றம் வீசியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனால் சந்தேகமடைந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது அங்கு நடிகை மலபிகா தாஸ் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார், பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் நடிகை மலபிகா தாஸ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT