எய்ட்ஸ் பாதித்து தனியாக இறந்து கிடந்த பிரபல நடிகை
எய்ட்ஸ் காரணமாக பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எய்ட்ஸ் காரணமாக பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல மலையாள நடிகை நிஷா நூர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். கமலின் டிக் டிக் நடிக் படத்தில் அறிமுகமானார்.
ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.அத்தோடு பல ஹிட் படங்களில் நடித்த அவர் திடீரென நடிப்பை நிறுத்தினார்.
அதன்பின், தயாரிப்பாளர் ஒருவர் நிஷாவை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிட்டதால் அவர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
பல ஆண்டுகள் கழித்து நாகை அருகே உள்ள தர்கா ஒன்றுக்கு வெளியே சாலையோரம் அவர் எலும்புக்கூடு நிலையில் பரிதாபமாக படுத்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது உடலில் புழுக்கள் மற்றும் எறும்பு ஓடிக் கொண்டிருந்தது.
சிலர் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 2007ல் சிகிச்சை பலனின்றி பலியானார்.