வானிலை தொடர்பில் வெளியான சிவப்பு அறிவிப்பு

தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

வானிலை தொடர்பில் வெளியான சிவப்பு அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் பல நாள் மீன்பிடி மற்றும் கடற்தொழிலாளர் சமூகத்தினரின் விசேட அவதானத்திற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரையில் பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-55 கி.மீ காற்று சாத்தியமாகும்.

மற்ற பகுதிகளில் அவ்வப்போது 30-40 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT