உயர்தர ஆசிரியர்களாக இணைய பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு 

உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
உயர்தர ஆசிரியர்களாக இணைய பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதற்கமைய, உயர்தரத்தின் கணிதம், விஞ்ஞானம், சர்வதேச மொழிகள், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்காக ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 

இதன்படி மாகாண மட்டத்தில் 5450 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.

ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு அமைவாக 35 வயதுக்கு குறைவான, தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இந்த போட்டிப் பரீட்சைக்காக எதிர்வரும் சில வாரங்களில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -