‘லியோ’ படம் பார்க்கச் சென்ற இளைஞர் குழு மோதல்; வாள்வெட்டில் ஐவர் படுகாயம்!
மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தளபதி விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்கிடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி அது வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 5 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT