காளான் பறித்தவர் சுட்டுக்கொலை - சந்தேக நபர்கள் மூவர் கைது!

குறித்த சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

காளான் பறித்தவர் சுட்டுக்கொலை - சந்தேக நபர்கள் மூவர் கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

பதுளை, வதகஹதோவ பிரதேசத்தில் கடந்த 02 ஆம் திகதி 44 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36, 44 மற்றும் 51 வயதுடைய கொடபோருவத்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கொலை செய்யப்பட்டவர் மூன்று சந்தேக நபர்களுடன் இணைந்து சம்பவத்தன்று காளான் பறித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, சந்தேக நபர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டவரை உள்நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT