மஹர சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது - பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிப்பு

"எங்கள் பிள்ளைகளைக் கொல்ல இடமளிக்க வேண்டாம்" என அவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்ததால் அந்த இடத்தில் நெகிழ்ச்சியான சூழல் நிலவியது. 

மஹர சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது - பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிப்பு
Image Credit - Ishara s.Kodikara
ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போதைய நிலையில் மஹர சிறைச்சாலையின் நிலைமை பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும், சிறைச்சாலை வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மஹர சிறைச்சாலை வளாகத்தில் நேற்று ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த விசேட பாதுகாப்புப் படையினர் சிறைக்குள் நுழைந்ததோடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிறைச்சாலையின் தற்போதைய நிலைமையைக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 412 (Bell 412) ரக ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் (Drone) இயந்திரங்கள் வான்வழியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன், நிலைமையைக் கருத்திற்கொண்டு, மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நேற்றிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

246 கெந்தலியத்த வீதி மேற்கு, 246 C கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் 181 G தம்புவ ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி இந்தப் பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, சிறைச்சாலைக்கு வெளியே நேற்றுத் திரண்டுள்ள கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் கவலையுடன் காணப்பட்டனர். 

இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

"எங்கள் பிள்ளைகளைக் கொல்ல இடமளிக்க வேண்டாம்" என அவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்ததால் அந்த இடத்தில் நெகிழ்ச்சியான சூழல் நிலவியது. 

நேற்றிரவு சிறைச்சாலைக்குள் என்ன நடந்தது என்பது குறித்த மேலதிக விவரங்களை அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT