பாடசாலை மாணவிகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை

சம்மாந்துறை பகுதியில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவிகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்மாந்துறை பகுதியில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்காக  விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு, அலைபேசியில் புகைப்படம் எடுப்பதாகவும் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, பெண்கள் பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்களில் பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரங்களில் பொலிஸார் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, போக்குவரத்து நடைமுறைகளை மீறி உள் வீதிகளில் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சம்மாந்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT