மிரிஸ்ஸ சந்திக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: படகு உரிமையாளர் படுகாயம்

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு 'ரிவோல்வர்' ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். 

மிரிஸ்ஸ சந்திக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: படகு உரிமையாளர் படுகாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மிரிஸ்ஸ சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய மீன்பிடி படகு உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றுள்ள இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு 'ரிவோல்வர்' ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். 

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT