தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்: ரூ.5 மில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு சீல் வைப்பு

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளன.
தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்: ரூ.5 மில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு சீல் வைப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடவத்தை - கனேமுல்ல வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், தரமற்ற வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையின் போது, தரமற்ற மசகு எண்ணெய் மற்றும் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்தமை மற்றும் சேமித்து வைத்திருந்தமை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் விலைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. 

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட விற்பனை முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர