மலேசியாவில் கைது செய்யப்பட்ட 'ரத்மலானே சைமா'! இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் சிக்கினார்

இவரது சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து காணப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட 'ரத்மலானே சைமா'! இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் சிக்கினார்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் "ரத்மலானே சைமா" மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை இவர் இயக்கி வந்ததாக இலங்கைப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவரது சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து காணப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்,  "ரத்மலானே சைமா", திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 'கஞ்சபானி இம்ரான்' என்பவரின் பிரதான உதவியாளராக கருதப்படுகிறார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT