மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் மற்றும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, மறு அறிவித்தல் வரை ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இந்த பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 

தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT