ஹட்டனில் மண்ணெண்ணை வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நபர் உயிரிழப்பு

வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

ஹட்டனில் மண்ணெண்ணை வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நபர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர், இன்று (27)  அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஹட்டன்- தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டன் நகரில் வாடகைக்கு கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று (26) இரவு 7மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக, எரிபொருள் நிலையத்துக்கு சென்று, சுமார் 12.30 மணியளவில் வீட்டுக்கு வருகைத் தந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அதிகாலை தனது கணவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாக  அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருந்தமையாலேயே தனது கணவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT