10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (02) அதிகாலை 04 மணி முதல் நாளை (03) அதிகாலை 04 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT