திருமணத்திற்கு புறம்பான பாலியல் உறவு: ஜோடிக்கு 140 முறை பிரம்படி தண்டனை

இந்த சம்பவத்தில் அந்த ஜோடியுடன் மேலும் நால்வரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒருவர் இஸ்லாமிய பொலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷரியா சட்டங்களை மீறியதாக அனைவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

திருமணத்திற்கு புறம்பான பாலியல் உறவு: ஜோடிக்கு 140 முறை பிரம்படி தண்டனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தோனேசியாவின் ஆச்சே (Aceh) மாகாணத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை மீறியதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு ஜோடி, பொதுமக்கள் முன்னிலையில் 140 முறை பிரம்பால் அடிக்கப்பட்டுள்ளனர் என BBC தெரிவித்துள்ளது.

திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டமை மற்றும் மதுபானம் அருந்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த ஜோடியில், 21 வயதுடைய பெண் மீது மூன்று பெண் அதிகாரிகள் மாறிமாறி பிரம்பால் அடித்தனர். கடும் வலியால் அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவரை மேடையிலிருந்து தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சம்பவத்தில் அந்த ஜோடியுடன் மேலும் நால்வரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒருவர் இஸ்லாமிய பொலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷரியா சட்டங்களை மீறியதாக அனைவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மதரீதியாக கடுமையான ஆச்சே மாகாணத்தில், இஸ்லாமிய சட்டங்களை மீறுபவர்களுக்கு பிரம்பால் அடிக்கும் தண்டனை வழக்கமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், இது மனித உரிமைகளுக்கு முரணானது என உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக விமர்சித்து வருகின்றன.

ஆச்சே மாகாணத்தின் இஸ்லாமிய குற்றவியல் சட்டப்படி, திருமணத்திற்கு வெளியான பாலியல் உறவுக்கு 100 பிரம்படிகள் விதிக்கப்படுகின்றன. அதேபோல், மதுபானம் அருந்தியதற்காக 40 அடிகள் தண்டனையாக வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தண்டனைகள் முறையாக கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், தண்டனைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் விதிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும், இந்தோனேசிய மனித உரிமை அமைப்பான Kontras-ன் ஆச்சே ஒருங்கிணைப்பாளர் அஸ்ஹருல் ஹுஸ்னா தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாமிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தனிப்பட்ட இடத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து, அவருக்கும் அவரது பெண் தோழிக்கும் தலா 23 முறை கம்படி அடிகள் வழங்கப்பட்டன. அந்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்படுவார் என ஆச்சே இஸ்லாமிய பொலிஸ் தலைவர் முகம்மது ரிசால் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட இந்தோனேசியாவில், ஷரியா சட்டங்களை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தும் ஒரே மாகாணம் ஆச்சே என்பதும், பல குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கம்படி தண்டனை வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT