மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு

மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

(க.கிஷாந்தன்)
 

மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா – கந்தபளை பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும், மழை காரணமாக நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியின் போக்குவரத்தும் சில மணித்தியாலங்கள் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT