அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைப்பு

நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (9) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கமைய பருப்பு 10 ரூபாயாலும், வெள்ளை அரிசி 5 ரூபாயாலும், சிவப்பு அரிசி 5 ரூபாயாலும், வெள்ளை நாட்டு அரிசி 4 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ பருப்பு 305 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளை அரிசி 179 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 180 ரூபாய்க்கும், ஒரு கிலோ சிவப்பு அரிசி 164 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT