தொடர் மழை… எந்தெந்த மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை? 

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. 

தொடர் மழை… எந்தெந்த மாவட்ட  பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை? 
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனமழை காரணமாக இன்று மதுரை,திண்டுக்கல்,கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பாடசாலைகளுக்கு மட்டும் விடுமுறையும் வழங்கி ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேபோல கோவையில் கனமழை காரணமாக என்று அரசு மற்றும் அனைத்து தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் கிராந் குமார் அறிவித்துள்ளார். பாடசாலை சிறப்பு வகுப்புகளும் இன்று நடைபெறாது என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT