குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து
ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, பேலியகொடை பகுதியில் 615 வீடுகளும், தெமட்டகொடை பகுதியில் 586 வீடுகளும், மொரட்டுவை பகுதியில் 575 வீடுகளும், மஹரகம பகுதியில் 112 வீடுகளும், கொட்டாவ பகுதியில் 108 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இவற்றில் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள 108 வீடுகள் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக ஒதுக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக சீன அரசாங்கம் 24.48 பில்லியன் ரூபாய் நிதியுதவி அளிக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT