290 ரூபாயை நெருங்கும் அமெரிக்க டொலர் ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

290 ரூபாயை நெருங்கும் அமெரிக்க டொலர் ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  304.28 ரூபாயாகவும், கொள்வனவு விலை 294.92 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.59 ரூபாயாகவும், கொள்வனவு விலை 215.90 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 331.18 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 317.59 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 385.84 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி  370.86 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை,  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுதியானது படிப்படியாக 290 ரூபாயை நெருங்கி வருகின்றது.  

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT