பாராளுமன்ற தாக்குதல் - மேலும் 2 பேருக்கு தொடர்பு: தலைமறைவானவர்களை தேடும் பணி தீவிரம்

4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
பாராளுமன்ற தாக்குதல் - மேலும் 2 பேருக்கு தொடர்பு: தலைமறைவானவர்களை தேடும் பணி தீவிரம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தியாவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர். இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 4 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்,

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது. இந்நிலையில், பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -