6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பாரதி என்பவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ் கிரீம் கடைநடத்தி வந்துள்ளார்.

Dec 1, 2022 - 10:50
6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பாரதி என்பவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ் கிரீம் கடைநடத்தி வந்துள்ளார். 

அதே நேரத்தில் அங்கு பிறந்து ஆறு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாரதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனை தொடர்ந்து அப்பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், பெற்றோர்கள் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் பாரதியை கைது செய்த காவல்துறையினர் போக்சோ வழக்கின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இதனையடுத்து கடைக்காரர் பாரதி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அவருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம். அத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்