நுவரெலியா பேருந்து விபத்தில் 40 பேர் காயம்

இந்த விபத்து இன்று (11) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பேருந்து விபத்தில் 40 பேர் காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி நபர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று நுவரெலியா, லபுகெல டொப்பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (11) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

திடீரென பிரேக் செயலிழந்ததன் காரணமாக பஸ் வீதியின் மேல் பகுதியில் இருந்து கீழ் பகுதிக்கு வளைவில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், விபத்தின் போது பேருந்தில் பயணித்த பஸ் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 41 பேரில் 40 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT