ஒரே நேரத்தில் வைத்திய நிபுணர்களாகிய தம்பதியர்!

காரைதீவில் தம்பதியர், பொதுமருத்துவத்தில் (VP) மருத்துவ முதுமாணி (MD in Surgery)பரீட்சையில் சித்திபெற்று, பொது மருத்துவ நிபுணர்களாக பட்டப் பின் பட்டம் பெற்றுள்ளனர்.

Mar 13, 2023 - 12:29
ஒரே நேரத்தில் வைத்திய நிபுணர்களாகிய தம்பதியர்!

காரைதீவில் தம்பதியர், பொதுமருத்துவத்தில் (VP) மருத்துவ முதுமாணி (MD in Surgery)பரீட்சையில் சித்திபெற்று, பொது மருத்துவ நிபுணர்களாக பட்டப் பின் பட்டம் பெற்றுள்ளனர்.

காரைதீவைச் சேர்ந்த வைத்திய தம்பதிகளான வைத்திய அதிகாரி டொக்டர் இராஜேஸ்வரன் அர்ஜுன்  மற்றும் வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி கேதுஜா அர்ஜுன் ஆகிய தம்பதியினரே ஒரே வேளையில் இம்மருத்துவ முதுமாணிப் பட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

2023-03-01ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டம் வழங்கப்பட்டது.

தற்சமயம், இவ் வைத்திய தம்பதியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்றனர்.

வைத்திய கலாநிதி முருகேசு கேதுஜா, 2007ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர உயிரியல் பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை மாணவியாக தெரிவாகி, சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.