இன்றைய ராசிபலன் – 03 அக்டோபர் 2022

இன்றைய ராசிபலன் – 03 அக்டோபர் 2022 (Today Rasi Palan) - மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன் – 03 அக்டோபர் 2022
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேஷம்: இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மிதுனம்:  பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு  வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமைதியான நாள்.

சிம்மம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனி   திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கன்னி: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனையை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூட்சுமங்களை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.  அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள்நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். நீண்டநாள்பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண்பீர்கள்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்துக் கொண்டே இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களால் வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வுமனப்பான்மை வந்து  நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

கும்பம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் ஓங்கும் நாள்.

மீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில்   புதியவாடிக்கையாளர்கள்தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சிலநுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT