Today Rasi Palan 17th February 2023: இன்றைய ராசிபலன்
Today Rasi Palan for Thursday, February 17th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது நியூஸ்21 தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Rasipalan 17th February 2023, Friday ராசிபலன் பிப்ரவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை 2023: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் நியூஸ்21 தமிழ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் சொந்த நாடு திரும்பவீர்கள். மகளிர் குழுவில் கிடைக்கும் பணத்தை வியாபாரத்திற்கு பயன்படுத்துவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். தகப்பனாரின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில்துறைக்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். மனைவி மக்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
ரிஷபம்
எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். நல்ல நண்பராக இருந்தாலும் சாட்சி வைத்து பணம் கொடுக்க மறக்காதீர்கள். கேஷ் கவுண்டரில் கவனமாக வேலை செய்யுங்கள். வியாபாரத்தில் யாரையும் கூட்டுச் சேர்க்காதீர்கள். தொழிலில் போட்டி வந்தாலும் அனுசரித்துப் போய்விடுங்கள். பணம் நகைகளை பத்திரமாக வைத்திருங்கள்.
மிதுனம்
தடைபட்ட திருமணத்தை நடத்தி வைப்பீர்கள். வேலை இடத்தில் அக்கறையோடு பணி செய்வீர்கள். அரசு வேலைகளை தடங்கல் இல்லாமல் நடத்துவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் கலகலப்பு அதிகப்படுத்துவீர்கள். வியாபார உயர்வுக்கு கடுமையாக உழைப்பீர்கள். இடையூறாக இருந்த போட்டிகளை இடம் தெரியாமல் செய்வீர்கள்.
கடகம்
வீம்பாக எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். நண்பர்களிடம் போட்டி போடாதீர்கள். வேலைகள் வேகமாக நடக்காததால் வேதனைப்படுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நகராட்சியால் சிரமப்படுவீர்கள். விவசாயத் தொழிலில் முனைப்புக் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழில் சிக்கலை சந்திப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் தாமதமாகவே பெறுவீர்கள்.
சிம்மம்
எளிய முறையில் வியாபாரம் செய்து பெரிய லாபத்தைப் பெருக்குவீர்கள். பிள்ளைகளின் கல்வித் திறனால் பெருமையடைவீர்கள். கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களை கைப்பற்றுவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் உச்சம் தொடுவீர்கள். சிறிய முதலீட்டில் சிறப்பான பலனை அடைவீர்கள்.
கன்னி
அன்னையின் ஆசியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பதவியில் அமர்வீர்கள். அரசாங்க வேலையில் சேருவீர்கள். சுணக்கமாக இருந்த தொழிலை ஏற்றம் காணச் செய்வீர்கள். உங்கள் பேச்சுத்திறனால் மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். பிரிந்து இருந்த இருந்த கணவன் மனைவியைச் சேர்த்து வைப்பீர்கள்.
துலாம்
அதிரடியான முயற்சிகளில் இறங்குவீர்கள். அதற்குரிய பலன் குறைவாகவே பெறுவீர்கள். சகோதர உறவுகள் சாதகமாக இருக்காது. அரசு வேலையில் இருப்பவர்கள் சிரத்தையுடன் பணி செய்வீர்கள். பதவி உயர்வுக்கு காத்திருப்பீர்கள். அலைச்சல் அதிகமானாலும் ஆர்டர்களை பெறுவீர்கள் . வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டுங்கள் .
விருச்சிகம்
நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். தடைபட்ட வீட்டு வேலைகள் மளமளவென நடத்துவீர்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்தக்வீர்கள். தொழில் போட்டிகளை துடைத் தொழிப்பீர்கள்.நகை வாங்கிக் கொடுத்து மகளையும் மருமகனையும் மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். தேடி வந்த உறவுகளை நல்ல முறையில் உபசரிப்பீர்கள்.
தனுசு
எளிதில் முடிய வேண்டிய செயல்கள் இழுபறியாக நடப்பதால் மனம் சஞ்சலப்படுவீர்கள். வேலையில் கவனமாக இல்லாவிட்டால் அரசு ஊழியர்கள் தண்டனைக்கு ஆளாவீர்கள். நில பிரச்சினைகள் சுலபத்தில் தீர்க்க முடியாமல் நிம்மதி இழப்பீர்கள். நியாயமாகப் பேசினாலும் உறவினர்கள் வெறுப்புக்கு ஆளாவீர்கள். கை மீறி போகும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பீர்கள்..
மகரம்
இல்லத்தரசிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து மண்டை காய வைப்பார்கள். உடல் ரீதியாக சின்னச் சின்ன உபாதைகளைச் சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகள் அதிகரித்து கவலையைக் கொடுக்கும். பணிச் சுமைகளால் தூக்கம் கெடுவீர்கள். எதிர்பார்த்த வேலை தள்ளிப்போகும். போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். அனாவசியச் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
கும்பம்
தைரியமாகச் செயலாற்றி தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தொழில்துறைகளை திட்டமிட்டு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள். காதலிக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்து அன்பை உறுதிப்படுத்துவீர்கள். புதிய தொலைக்காட்சி பெட்டியை தவணை முறையில் வாங்குவீர்கள்.
மீனம்
போட்டி பந்தயங்களில் அபார வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் சாதனையால் பெருமைப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு வந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடன் சுமைகள் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சுவையான உணவுகளை ருசித்து மகிழ்வீர்கள்.