ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை திருடிய இளைஞன் கைது 

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணம் மோசடி செய்த நபர் 15 அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை திருடிய இளைஞன் கைது 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணம் மோசடி செய்த நபர் 15 அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுக்க வந்த சிலருக்கு உதவி செய்வதாகக் கூறி அவர்களின் இரகசிய இலக்கத்தை குறித்த சந்தேக நபர் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடக், குறித்த நபர்களிடம் பணத்துடன் போலி அட்டையை கொடுத்து சரியான அட்டையை தம்வசம் வைத்திருந்து பின்னர் பணத்தை எடுத்து சென்றது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிலியந்தலை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான, மஹரகம உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற 50 முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -