கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு

காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (27) காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகரசபைப் பகுதிகளிலும், களனி, வத்தளை, ஜா-எல, பியகம, மஹர, தொம்பே, கட்டான மற்றும் மினுவாங்கொட ஆகிய பிரதேச சபைப் பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT