விஜய்யின் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகா? 

லியோ படப்பிடிப்பினை முடித்த நடிகர் விஜய் நார்வே சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய்யின் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகா? 
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ உருவாக உள்ளது. 

லியோ படப்பிடிப்பினை முடித்த நடிகர் விஜய் நார்வே சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியானது. 

ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது. ‘காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடிக்க ஜோதிகாவிடம் கால்சீட் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2000இல் குஷி, 2003இல் திருமலை ஆகிய வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். 

இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால் 20 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா-விஜய் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும். இது உண்மையாக வேண்டுமென ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள். 
 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT