அதிரடியாக உயர்த்தப்பட்ட நிதி வரம்பு - இங்கிலாந்தில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சர்வதேச மாணவர்கள் தனது கல்வி நடவடிக்கை முடியும் வரை தங்கள் வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் (Home Office) முன் நிரூபிக்க வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அதிரடியாக உயர்த்தப்பட்ட நிதி வரம்பு - இங்கிலாந்தில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரித்தானியாவில் (UK) கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச மாணவர்கள் தனது கல்வி நடவடிக்கை முடியும் வரை தங்கள் வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் (Home Office) முன் நிரூபிக்க வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து திருத்தப்படாத இந்த நிதி வரம்பு, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகளுடன் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதனையடுத்து, இண்டனில் படிக்கச் செல்லும் மாணவர்கள், ஒவ்வொரு மாதத்திற்கும் £1,483 நிதி இருப்பை நிரூபிக்க வேண்டும் என்பதுடன், லண்டனுக்கு வெளியே உள்ள மாணவர்கள் £1,136 நிதி இருப்பை நிரூபிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக இலண்டனில் £1,334 மற்றும் இலண்டனுக்கு வெளியே £1,023ஆக இந்த நிதி வரம்பு காணப்பட்டது.

எனினும், நாடு முழுவதும் வாழ்க்கை செலவுகள் உயரும் நிலையில், இந்த நிதி வரம்புகள் காலத்துக்கு காலம் திருத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், இலண்டனில் 9 மாதங்களுக்குப் பராமரிப்பு நிதியாக £13,348 தொகையை மாணவர்கள் தங்கள் விசா விண்ணப்பத்தின் போது நிரூபிக்க வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT