இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மதியம் 2.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT