வைரமுத்துவை தனிமையில் சந்திக்க வேண்டாம்.. சின்மயி எச்சரிக்கை

தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

வைரமுத்துவை தனிமையில் சந்திக்க வேண்டாம்.. சின்மயி எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, கவிஞர் வைரமுத்துவை சந்தித்த தொலைக்காட்சி நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்த பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்பொழுது வைரமுத்து ஆசிர்வாதம் அளிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில் நடிகை அர்ச்சனாவின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT