நீண்ட நாட்களுக்கு பிறகு வீழ்ச்சியடையும் தங்க விலை - வெளியான தகவல்
இலங்கையில் தங்கத்தின் விலை: இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலை
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அண்மைய நாட்களாக சடுதியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையானது நேற்று முதல் மீண்டும் குறைவடைந்து வருகின்றது.
இன்றைய நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 803,041 ரூபாயாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 28,330 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 226,650 ரூபாயாக காணப்படுகின்றது.
22 கரட் தங்க கிராம் 25,970 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 207,800 ரூபாயாக காணப்படுகின்றது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,790 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 198,350 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் 213,000 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 197,000 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.