கடத்தி தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை - சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு

குருவிட்ட, கொக்கோவிட்ட பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தி தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை - சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு
ADVERTISEMENT
ADVERTISEMENT

குருவிட்ட, கொக்கோவிட்ட பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடொன்றில் வைத்து நபர் ஒருவர் தாக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் நேற்று (21) குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து தாக்கப்பட்ட நபரை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், காயமடைந்த நபரை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பரங்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான நபரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட பகையே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT