நடைமுறைக்கு வரும் புதிய வரி: அதிகரிக்கவுள்ள விலைகள்

அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது

நடைமுறைக்கு வரும் புதிய வரி: அதிகரிக்கவுள்ள விலைகள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பெறுமதி சேர் வரியை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார். 

“அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. இதன் ஊடாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வரிகளை உயர்த்துவது போல், வரி கட்டாதவர்களிடம் இருந்து வரியை வசூலிப்பதற்கு வரி தொடர்பான வலையமைப்பை விஸ்தரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பால் பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை” என அவர் கூறியுள்ளார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT