ADVERTISEMENT

Tag: பொலிஸ் விசாரணை

காலியில் எயார் ரைபிள் துப்பாக்கி வெடித்ததில் பெண் உயிரிழப்பு: பணிப்பெண் கைது

காலி அம்பலன்வத்த பகுதியில் எயார் ரைபிள் ரக துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த 57 வயதுடைய பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சிறுநீரக வைத்தியசாலை சிலிண்டர் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; சுயாதீன விசாரணைக்காக ஐவர் கொண்ட குழு நியமனம்

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட வெடிப்பில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

நிந்தவூர் மாட்டுப்பள்ளை பகுதியில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஆடை சிக்குண்டு இடம்பெற்ற விபத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு: இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தந்தை காயம்

தெஹிவளை கவ்டான பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு விபத்துகளில் 7 வயது சிறுமி உள்பட மூன்று பெண்கள் பலி

இலங்கையின் அடம்பன், மாத்தளை, கொழும்பு கிராண்ட்பாஸ் ஆகிய இடங்களில் நேற்று (25) நிகழ்ந்த தனித்தனி விபத்துகளில் 7 வயது சிறுமி, 45 மற்றும் 63 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மூன்று வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறை அதிகாரிகள் தொடர்பான இரகசிய தகவல்களை சேகரித்த நபர் கைது – பொலிஸார் அதிர்ச்சி தகவல்

புதிய மெகசின் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே குறித்த சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டு: நால்வர் சிக்கினர்! வெளிநாட்டிலுள்ள திட்டமிட்ட குற்றவாளியின் உத்தரவு?  

இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேசாலையில் மர்ம மரணம்? புதரில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு; தீவிர விசாரணை!

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலமாக மீட்கப்பட்டவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முகமூடி அணிந்த இருவர் சொகுசு பஸ்ஸுக்கு தீ வைப்பு - நூலிழையில் உயிர் தப்பிய சாரதி, நடத்துநர்!

இந்தத் தீயினால் குறித்த சொகுசு பஸ் முழுமையாக எரிந்து நாசமானது. அத்துடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல - கொள்ளுப்பிட்டி மார்க்கத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பஸ்களும் சிறிய அளவில் சேதமடைந்துள்ளன.

பெந்தோட்ட கடலில் வான் சாகச விபத்தில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

பாராமோட்டரை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த விமானி உயிர் தப்பியுள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு

வீதியைக் கடந்து சென்ற நாயைத் தவிர்க்க முயன்றபோது, மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த 59 வயது நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம்: விசாரணை தொடர்கிறது, ஜூலை 20ஆம் திகதி இறுதிச் சடங்கு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 20ஆம் திகதி பொலிஸ் உயரிய மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.

நவகமுவ துப்பாக்கிச் சூடு: காயமடைந்த 26 வயது இளைஞன் மருத்துவமனையில் உயிரிழப்பு

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன்  இன்று (17) உயிரிழந்துள்ளார்.

பேஸ்புக்கில் வாகனம் விற்று மீண்டும் ஆயுத முனையில் கொள்ளை! ரூ.40 இலட்சம் மோசடியில் முக்கிய சந்தேகநபர் கைது

ஆரம்ப விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, சந்தேகநபர்கள் முதலில் முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வாங்குபவர்களை தொடர்புகொண்டுள்ளனர்.

மத்துகமையில் வீடொன்றின் மீது T-56 துப்பாக்கிச் சூடு: உயிர்ச்சேதம் ஏதுமில்லை – பொலிஸார் தீவிர விசாரணை

குழுவொன்று சம்பவ இடத்துக்கு வந்து குறித்த வீட்டை இலக்காகக் கொண்டு, பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குடும்பத் தகராறு: கணவரின் தாக்குதலில் படுகாயமடைந்த 29 வயது இளம் பெண் உயிரிழப்பு

அரலகன்வில பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.