இலங்கையின் பல பகுதிகளுக்கு பலத்த இடி, மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு கடுமையான இடி மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளுக்கு பலத்த இடி, மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பலத்த இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, கடுமையான மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில், பொதுமக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT