மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்ப்பது தொடர்பில் விசேட அறிவித்தல்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டுமே பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்

மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்ப்பது தொடர்பில் விசேட அறிவித்தல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தரம் 1, தரம் 5, தரம் 6  மற்றும் உயர்தரம் தவிர்ந்த பிற இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள், பாடசாலைகளில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமென என கல்வி அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை உள்வாங்க வேண்டும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டுமே பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின், கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி அதிபர்கள் நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், மாணவர் சேர்க்கை கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT