துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஹெரோயினுடன் கைது

சந்தேகநபரிடம் இருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஹெரோயினுடன் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்டகொலை முயற்சி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கடந்த 27ஆம் திகதி மாலை லேலிஹெட்டுவ சந்தியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சந்தேகநபரிடம் இருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், கடந்த 17ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனத் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT