சனி பெயர்ச்சி 2025: கொட்டி கொடுக்கும் சனி.. இந்த 3 ராசிகளுக்கு அதிஷ்டம்!

சனி பெயர்ச்சி 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். 

மார்ச் 5, 2025 - 18:47
சனி பெயர்ச்சி 2025: கொட்டி கொடுக்கும் சனி.. இந்த 3 ராசிகளுக்கு அதிஷ்டம்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். 

இந்த நிலையில், மார்ச் 29ஆம் தேதி இரவு 11:03 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப் பெயர்ச்சி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அமோக பலன்களை தரப்போகிறது. 

கடகம்: நீண்ட நாள் நிதிப் பிரச்சனைகளில் இருந்து கஷ்டம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நிலுவையில் இருக்கும் பணிகள் நிறைவேறும். மொத்தத்தில் சனியால் மகிழ்ச்சியை அனுபவிக்க உள்ளீர்கள்.

மகரம்: வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க சிறந்த வாய்ப்பு உருவாகும். திருமணத் தடைகள் நீங்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்: நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும்.

பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியான நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!