93 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை... சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

ஆண்டி ஃப்ளவருக்குப் பிறகு ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். 

93 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை... சாதனை படைத்த ரிஷப் பண்ட்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்தார். 

முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்திருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட், 2வது இன்னிங்ஸிலும் மற்றொரு சதம் அடித்து டெஸ்ட் வரலாற்றில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை படைத்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேநேரத்தில், டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார்.

இந்திய அணி தனது முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியை கடந்த 1932ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இதன்மூலம், 93 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்ததில்லை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இப்போது, ரிஷப் பண்ட் இவ்வாறு செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.

அத்துடன், ஆண்டி ஃப்ளவருக்குப் பிறகு ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். 

ஜிம்பாப்வே அணியின் ஜாம்பவான் ஆண்டி ஃப்ளவர் கடந்த 2001ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 142 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 199 ரன்களும் எடுத்திருந்தார். 

இப்போது, ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் எடுத்துள்ளார்.

2 சதங்கள் அடித்த வீரர்கள்

விஜய் ஹசாரே
சுனில் கவாஸ்கர் ( 3 முறை)
ராகுல் டிராவிட் (2 முறை)
விராட் கோலி
அஜிங்க்யா ரஹானே
ரோஹித் சர்மா
ரிஷப் பண்ட்

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT