கிளிநொச்சியில் 40.9 ஏக்கர் காணி விடுவிப்பு - மேலதிக அரசாங்க அதிபர்

இராணுவத்தினர் விடுவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச காணியையும் மாவட்டசெயலர் பார்வையிட்டார்.

கிளிநொச்சியில் 40.9 ஏக்கர் காணி விடுவிப்பு - மேலதிக அரசாங்க அதிபர்
ADVERTISEMENT
ADVERTISEMENT

Colombo, March 12 ( News21 ) - கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காணிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் எஸ்.முரளீதரன் தெரிவித்தார்.

அத்துடன், இராணுவத்தினர் விடுவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச காணியையும் மாவட்டசெயலர் பார்வையிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில்  3 பிரதேச செயலக பிரிவுகளில் 40.9 ஏக்கர் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அல்லது பொதுமக்கள் உறுதிப்படுத்தி பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு தமக்குரிய காணிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT