அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு...!

சென்னை உள்பட தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு...!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதனிடையே, சென்னை உள்பட தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT